‘ஒரே நாடு, ஒரே காவல் சீருடை’ குறித்து சிந்திக்க வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்!

‘ஒரே நாடு, ஒரே காவல் சீருடை’ குறித்து சிந்திக்க வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்!

‘ஒரே நாடு, ஒரே  காவல் சீருடை’ யை அறிமுகம் செய்வது குறித்து சிந்திக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான சிந்தனைக் கூட்டம்:

உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான சிந்தனைக் கூட்டம் அரியானாவின் சூரஜ்கண்டில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள், மத்திய ஆயுதக் காவல்படைத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

உள்துறை அமைச்சர் உரை:

முதல் நாள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிய அவர், நாட்டில் குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: கோவை வழக்கில் திடீர் திருப்பம்...6 வது நபர் அதிரடி கைது...நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

2ஆம் நாள் மாநாடு:

இந்நிலையில், உள்துறை அமைச்சர்களின் 2வது நாள் (இன்று) சிந்தனை அமர்வு மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு மாநிலங்களும் ஒன்றிடம் இருந்து மற்றொன்று கற்றுக்கொள்ள இந்தநிகழ்ச்சி உதவியாக இருப்பதாக குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்:

மேலும், தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு என கூறிய அவர், மாநில காவல்துறையினருக்கு இடையேயான தொடர்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அத்துடன், இந்தியாவில் காவல்துறையை வலுப்படுத்த தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் செயல்முறைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். 

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தக் கூட்டத்தில் “ஒரே நாடு, ஒரே  காவல் சீருடை” என்ற திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து சிந்திக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.