பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை... புதிய கட்டுப்பாடுகள் வருமா..?

இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை... புதிய கட்டுப்பாடுகள் வருமா..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை உருவாகி மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து மெல்ல-மெல்ல சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில், தற்போது உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. டெல்டாவை விட அதிக வீரியம் கொண்டதாக கருதப்படுவதால், 3-வது அலைக்கு வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 227 ஆக உள்ளது. வரும் வாரங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என அடுத்தடுத்து கொண்டாட்டங்கள் வர இருப்பதால் ஒமிக்ரான் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஒமிக்ரான் தொற்று காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.