7 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக பின்வாங்கிய பிரதமர் மோடி...

கடந்த 7 வருட மத்திய பாஜக ஆட்சி வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் மோடி பின்வாங்கியிருப்பதாக பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

7 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக பின்வாங்கிய பிரதமர் மோடி...

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற பிறகு பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை பிரதமர் மோடி எடுத்த நிலையில், தனது முடிவு குறித்து எத்தகைய கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் பிரதமர் மோடி அதில் இருந்து பின்வாங்கியதே இல்லை.

இந்தநிலையில் முதல் முறையாக பிரதமர் மோடி தனது முடிவில் இருந்து பின்வாங்கியிருப்பதாக பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக சந்தித்த படுதோல்வியே காரணம் என கூறப்படுகிறது. கடந்த முறை வெற்றி பெற்ற பல தொகுதிகளை பாஜக இழந்தது.

இந்த நிலையில் விரைவில் பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதனை மனதில் வைத்தே மோடி இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.