8000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்!

8000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்!

குஜராத்தின் பரூச் நகரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அவ்வப்போது அங்கு சென்று வரும் பிரதமர் நரேந்திரமோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.  அந்தவகையில் இன்று பரூச் நகரில் உள்ள அமோத் பகுதியில், ரசயானம் மற்றும் மருந்தக தொழிற்சாலைகள் என 8000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

இதையும் படிக்க: மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!!கட்சியால் ஓரங்கட்டப்படும் காரணமென்ன!!!

தொடர்ந்து  நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங்குடனான  தனது நட்பு பற்றி நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். மேலும் அவரது மறைவு நாட்டிற்கு பேரிழப்பு எனவும், தான் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது முலாயம் தனது அறிவுரை மூலம் வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய மோடி, பரூச் நகரில் ஏற்றுமதியை அதிகரிக்க சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என கூறினார். 

இதைத்தொடர்ந்து ஆனந்த் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்களுடனும் அவர் உரையாற்றினார்.  மாலை அகமதாபாத் செல்லும் அவர், ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான  சுகாதார திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மோடி ஷேக் ஷனிக் சன்குல் பேஸ் 1 திட்டத்தையும் திறந்து வைக்கிறார்.  இதேபோல் ஜாம்நகரிலும் ஆயிரத்து 450 கோடி மதிப்பிலான பாசன, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோக திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.