"பிரதமர் நாற்காலியை பிறப்புரிமையாக கருதுகிறது காங்கிரஸ்" பிரல்ஹாத் ஜோஷி!!

"பிரதமர் நாற்காலியை பிறப்புரிமையாக கருதுகிறது காங்கிரஸ்" பிரல்ஹாத் ஜோஷி!!

இந்திரா காந்தி குடும்பத்தினர் பிரதமர் நாற்காலியில் அமர்வதை தங்களது பிறப்புரிமையாக நினைத்துக் கொண்டிருப்பதாக  மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி விமர்சித்துள்ளார். 

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். 

மேலும், "காங்கிரஸ் ஆட்சியின் போது வட கிழக்கு மாநிலங்களில் எத்தனையோ கலவரங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்போதைய உள்துறை அமைச்சர், அங்கெல்லாம் சென்று பார்க்கவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், "பிரதமர் மோடி பதவியேற்று 9 ஆண்டுகள் கடந்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்திரா காந்தி குடும்பத்தினர் பிரதமர் நாற்காலியில் அமர்வதை தங்களது பிறப்புரிமையாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்" என்று கூறினார்.

இதையும் படிக்க || OTT வழக்கு: மத்திய அரசை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!