பூமியை தாக்க வரும் சக்திவாய்ந்த சூரிய புயல் - நாசா எச்சரிக்கை

சக்திவாய்ந்த சூரிய புயல் இன்று பூமியை தாக்க உள்ளதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமியை தாக்க வரும் சக்திவாய்ந்த சூரிய புயல் - நாசா எச்சரிக்கை

சக்திவாய்ந்த சூரிய புயல் இன்று பூமியை தாக்க உள்ளதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சூரியனை ஒரு மிகப்பெரிய அணுஉலை என்று கூறலாம். சூரியனில் உள்ள கருப்பு புள்ளிகளில் இருந்து பூமியை நோக்கி வரும் அதிக கதிர்வீச்சு கொண்டதே சூரிய புயல் என அழைக்கப்படுகிறது. இந்த சூரியக் காற்று பூமியின் காந்த தடுப்பு வளையத்தை பாதிக்கும். அது விண்வெளி வீரர்களையும், பூமியில் உள்ள மனிதர்கள், மிருகங்கள், செடி கொடிகள் அனைத்தையும் பாதிக்கும்.

இந்தநிலையில் மிகவும் சக்திவாய்ந்த சூரிய புயல் ஒன்று 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்துக் கொண்டிருப் பதாகவும் இது பூமியின் காந்தப்புலத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகவதாகவும் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தொலைபேசி, ஜி.பி.எஸ் சிக்னல்கள் மற்றும் வாணொலி சிக்னல்களை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் வேகம் மேலும் அதிகரிக்ககூடிய ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.