லோக்நாயக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் அரசியல் செய்கிறதா பாஜக..?!

லோக்நாயக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் அரசியல் செய்கிறதா பாஜக..?!

லோக்நாயக் ஜெய பிரகாஷ் நாராயணின் 120வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி பாஜக உற்சாகமடைந்துள்ளது.  குறிப்பாக பீகார் மற்றும் உ. பி. மாநில பாஜக உறுப் பினர்கள்.  

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஜே பி பிறந்த இடமான சிதாப் டியாராவுக்கு செல்கிறார், அவருடன் உ. பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் எம். பி.க்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிதாப் டைராவில் உள்ள ஜெயப் பிரகாஷ் நாராயணனின் சிலையை உள்துறை அமைச்சர் ஷா திறந்து வைக்கிறார். மேலும் இந்த சிலை தேசிய நினைவுச்சின்னமாகவும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். ஷாவைத் தவிர, யோகி ஆதித்யநாத்தும் இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். பீகார் மற்றும் உ. பி.யின் அரசியல் சமன்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே, இவ்வளவு பெரிய அளவில் பா.ஜ.க, தலைவர்கள் இங்கு கூடுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த திட்டத்தில் விவசாயிகளை அழைத்து வருவதற்கான முழுத் திட்டமும் தயாராகி வருவது பீகார் பாஜகவில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சிக்கான பெரிய அளவிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பெருமளவில் மக்கள் கூடும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக விழா நடைபெறும் இடத்திற்கு விவசாயிகளை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு முன்னதாக, முதல்வர் நிதிஷ் குமாரும் சம்பவ இடத்திற்கு வந்து வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார். வருகையின் போது பல திட்டங்களையும் அறிவித்துள்ளார். லோக்நாயக் ஜெய் பிரகாஷ் நூலகம், சிதாப் டியாரா முதல் மெயின் ரோடு வரையிலான புதிய சாலை ஆகியவற்றை திறந்து வைத்ததோடு,  ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.

இதையும் படிக்க:   மின் ஊழியர்களின் அரை நிர்வாணப் போராட்டம்...