பாட்டில் தண்ணீரை காட்டிலும் பெட்ரோலின் விலை குறைவு தான்- அமைச்சர் சர்ச்சை பேச்சு  

பாட்டில் தண்ணீரை காட்டிலும், பெட்ரோலின் விலை குறைவு தான் என்ற அசாம் அமைச்சரின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாட்டில் தண்ணீரை காட்டிலும் பெட்ரோலின் விலை குறைவு தான்- அமைச்சர் சர்ச்சை பேச்சு   

பாட்டில் தண்ணீரை காட்டிலும், பெட்ரோலின் விலை குறைவு தான் என்ற அசாம் அமைச்சரின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தை காரணம் காட்டி, பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலையேற்றம் நாடு முழுவதும் தீயாய் எரிந்துக் கொண்டிருக்க அசாம் அமைச்சரின் சர்ச்சை பேச்சு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் அமைந்துள்ளது.

அதாவது பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரை காட்டிலும் பெட்ரோல், டீசல் விலை குறைவு தான் என   அமைச்சர் ராமேஸ்வர் தெலி பேசியுள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வரியை கொண்டு தான் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.