இஸ்லாமிய பெண்ணை புர்க்காவை கழற்ற சொல்லி மிரட்டிய நபர்கள்: இணையத்தில் வைரலாகும் வீடியோ...
மத்திய பிரதேசத்தில் தனது ஆண் நண்பருடன் சென்ற இஸ்லாமிய பெண்ணை புர்க்காவை கழற்ற சொல்லி மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
போபால் நகரின் இஸ்லாம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பெண் நண்பருடம் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த சிலர், அவர்களது வாகனத்தை வழிமறித்து விசாரித்துள்ளனர்.இதனால் இரண்டு பேரும் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருந்தபோது, பின் சீட்டில் அமர்ந்திருந்த இளம் பெண்ணிடம் அவர் அணிந்திருந்த புர்க்காவை கழற்றுமாறு வற்புறுத்தி உள்ளனர்.
மேலும் புர்க்காவை கழற்றி உன் முகத்தைக் காட்டு எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் பயத்தில் இளம் பெண்ணும் நடுரோட்டிலேயே தான் அணிருந்த புர்காவை கழற்றியுள்ளார்.இதில், வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் இந்து எனவும், அந்த பெண் இஸ்லாமியர் எனவும் நினைத்து இத்தகைய செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவரவும், இனி இதுபோல செய்யக்கூடாது என எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வெளியான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
A girl was forced to remove her burkha as the people suspected that the man on whose scooter she was riding pillion was a Hindu, in Islam Nagar, Bhopal on Saturday afternoon @ndtv @ndtvindia pic.twitter.com/66QPE5OJax
— Anurag Dwary (@Anurag_Dwary) October 16, 2021