எதிர்க்கட்சிகள் அமளி... முடங்கியது நாடாளுமன்றம்...!

எதிர்க்கட்சிகள் அமளி...  முடங்கியது நாடாளுமன்றம்...!

ராகுல் பதவி நீக்கம் அதானி விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் மீண்டும் முடங்கியது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இன்றைய கூட்டத்திற்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், கருப்பு உடையணிந்து எதிர்கட்சி எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து இரு அவைகளும் கூடிய போது ராகுல்காந்தி பதவிநீக்கத்தை திரும்பப் பெறுவது, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக பதாகைகளுடன் எதிர்கட்சிகள் முழக்கமிட்டன. இதனால் தொடங்கப்பட்ட 5 நிமிடங்களிலேயே இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  

தொடர்ந்து மக்களவை 2 மணிக்கு கூடியதும், பதாகைகளை வைத்து சபாநாயகரை மறைத்தும் முழக்கங்கள் எழுப்பியும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக மாநிலங்களவையில் காகிதமின்றி டிஜிட்டல் முறையில் சபாநாயகர் ஜக்தீப் தன்கர் கூட்டத்தை இன்று வழிநடத்தினார். இந்நிலையில் ராகுல், அதானி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.