தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட விமான தயாரிப்பு...அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!!!

தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட விமான தயாரிப்பு...அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!!!

இந்திய விமானப்படையின் இந்த ஒப்பந்தம் முடிந்ததும், C-295 போக்குவரத்து விமானங்களை இயக்கும் மிகப்பெரிய நிறுவனமாக இந்தியா மாறும். 

அடிக்கல் நாட்டுகிறார் மோடி:

குஜராத் சட்டசபை தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.  இந்த சூழ்நிலையில், தேர்தலுக்கு முன், குஜராத்திற்கு மிகப் பெரிய பரிசு கிடைக்கப் போகிறது.  குஜராத் மாநிலம் வதோதராவில் ராணுவத்திற்கான சி-295 போக்குவரத்து விமான நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். 

முதல் தனியார் நிறுவனம்:

நாட்டிலேயே முதல்முறையாக தனியார் நிறுவனம் ஒன்று விமானம் தயாரிக்க உள்ளது.  இந்த விமானங்களை டாடா ஏர்பஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர் அர்மானி கிரிதர் கூறுகையில், ”40 விமானங்களைத் தவிர, டாடா ஏர்பஸ் நிறுவனம் விமானப்படையின் தேவை மற்றும் போக்குவரத்தின் அடிப்படையில் கூடுதல் விமானங்களையும் தயாரிக்கும். ” என்று கூறியுள்ளார்.

ஒப்பந்தம் கையெழுத்து:

கடந்த ஆண்டு செப்டம்பர் 2021 இல், இந்திய விமானப்படை ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, டாடா நிறுவனத்துடன் இணைந்து 40 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விமானம் தயாரிப்பில் இந்தியா 96 பங்குகளை வைத்திருக்கும் என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகின் மிகப்பெரிய செயல்பாட்டாளர்:

இந்திய விமானப்படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் சந்தீப் சிங் கூறுகையில், ”இந்த ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, சி-295 போக்குவரத்து விமானத்தின் மிகப்பெரிய செயல்பாட்டாளராக இந்திய விமானப்படை மாறும். ” என்று கூறியுள்ளார்.

என்ன நடந்தாலும்..:

”இந்த விமானங்களை தயாரிப்பதில், என்ன நடந்தாலும், அதை இந்தியாவிலேயே தயாரிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே எங்களது முயற்சியாக இருக்கும்.”  என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் அர்மானி கிரிதர் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  கூட்ட நெரிசல் மரணங்கள்... நிர்வாக அலட்சியம் காரணமா..? இதுவரை நடந்துள்ள கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து ஒரு அலசல்..!!!