இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி கிராமத்தை அறிவித்தார் பிரதமர் மோடி!!!

இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி கிராமத்தை அறிவித்தார் பிரதமர் மோடி!!!

சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். இதற்காக இன்று தனி விமானம் மூலம் அவர் அகமதாபாத் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் ஆளுநர் ஆச்சார்யா தேவ் விரத், முதல்வர் புபேந்தர் படேல், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து  மோதேராவில் நடைபெறும் விழாவில், 3 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

அப்போது முழுமையாக சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமமாக மோதேரா கிராமத்தை பிரதமர் அறிவித்து அதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் சூரியக் கோயிலுடன் தொடர்புடைய மோதேரா, இனி சூரிய சக்தி மற்றும் அதன் முன்னேற்றத்திற்காகவும் நாடு முழுவதும் பேசப்படும் எனவும் பெருமிதம் அடைந்தனர்.

இதையும் படிக்க:  ”பகைவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து.......” துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின் கனிமொழி...!!