ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு.. ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி கோயில் நீரில் மூழ்கியது!!

துங்கபத்ரா அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி கோயில்  வெள்ளப்பெருக்கில் மூழ்கியது.

ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு.. ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி கோயில் நீரில் மூழ்கியது!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம்  பிச்சாலி கிராமத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி கோவில் உள்ளது.

இந்த நிலையில் துங்கபத்ரா நீர்த்தேக்கத்தில் இருந்து ஆற்றில்  ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி கோயில்  வெள்ளப்பெருக்கில் மூழ்கியது.

மேலும் சிந்தனூர், மணவி, ராய்ச்சூர் தாலுகா ஆற்றங்கரையோர கிராமங்கள் வெள்ள அபாயத்தில் உள்ளன. ஆற்றுப்படுகையில் உள்ள நிலங்களுக்குள் தண்ணீர் புகுமோ என்ற விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் வலதுபுறம் உள்ள கிருஷ்ணாவிலும், இடதுபுறம் உள்ள துங்கபத்ராவிலும் லட்சக்கணக்கான கனஅடி நீர் வரத்து இருப்பதால், மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.