மூளைச்சாவு அடைந்த 16 மாத ஆண் குழந்தையின் உறுப்பு தானம்...!

மூளைச்சாவு அடைந்த 16 மாத ஆண் குழந்தையின் உறுப்பு தானம்...!

16 மாத ஆண் குழந்தை ஒன்று, தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து மூளை சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர், அந்த குழந்தையின் உறுப்புகளை தானம் செய்து, இரண்டு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர். 

டெல்லியை சேர்ந்த உபிந்தர் என்பவரின் ஒன்றரை வயது மகன் ரிஷாந்த். கடந்த ஆகஸ்ட் 17 ம் தேதி அன்று, இந்த குழந்தை, தவறி விழுந்து படுகாயமடைந்தது. பின்னர், ஜமுனா பூங்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதே நாளில்,  எய்ம்ஸில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் அபெக்ஸ் ட்ராமா சென்டருக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஆகஸ்ட் 24 ம் தேதி, அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து எய்ம்ஸின் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் தீபக் குப்தா, " தானம் செய்வதற்காக குழந்தை பிறந்ததுள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை எட்டு நாட்கள் போராடியது.  தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு எடுக்கப்பட்ட CT ஸ்கேனில் முழு மூளையிலும், மீட்கமுடியாத கடுமையான சேதம் உண்டாகி இருந்தது தெரியவந்தது." என கூறியுள்ளார். 

பின்னர் அந்த குழந்தையின் குடும்பத்தினரிடம், எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள உறுப்பு மீட்பு வாங்கி அமைப்பின் மருத்துவர்கள் மற்றும் மாற்று ஒருங்கிணைப்பாளர்களால் உறுப்பு தானம் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள், குழந்தையின் உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.  

இந்நிலையில் நேற்று, அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய உறுப்புகளை மீட்கும் பணி, காலை 5 மணி வரை தொடர்ந்தது. மேலும் உடல் உறுப்புகள் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதோடு எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐந்து வயது சிறுவனுக்கு இரண்டு சிறுநீரகங்களும், மேக்ஸ் மருத்துவமனையில், ஆறு மாத சிறுமிக்கு கல்லீரலும் மாற்றப்பட்டது. மேலும் அவரது இதய வால்வுகள் மற்றும் கார்னியாக்கள் எய்ம்ஸ் மருத்துவமனை வங்கியில் பாதுகாக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து குழந்தையின் தந்தை உபிந்தர், " துரதிர்ஷ்டமான அன்று காலையில், நான் வேலைக்குச் செல்வதில் மும்முரமாக இருந்தேன், என் குழந்தையை என் கைகளில் கூட வைத்திருக்க முடியவில்லை. அவரை இழந்துவிட்டோம். ஆனால் எங்களுக்கு உறுப்பு தானம் பற்றி தெரிந்தபோது, அவரது உறுப்புகளால் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றால், நான் அவற்றை தானம் செய்ய வேண்டும் என்று நான் உணர்ந்தேன் " என கூறியுள்ளார்.