பொது சிவில் சட்டம்; எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

பொது சிவில் சட்டம்; எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற் கு காங் கிரஸ், திரிணாமுல் காங் கிரஸ் இடதுசாரி கள் திமு க., உள்ளிட்ட எதிர் கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, நாட்டில் அனைவரு க் கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாஜ க வா க் குறுதி அளித்தது. இதற் கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   கடந்த 9 ஆண்டு களா க இதுப்பற்றி  எதுவும் பேசாமல் தற்போது நாடாளுமன்ற தெர்தல் நெருங் கும் நிலையில் நாட்டில் அனைவரு க் கும் பொது சிவில் சட்டம் தேவை என அண்மையில் மோடி பேசினார். இது பாஜ கவின் தேர்தல் யு க்தி என பலரும் விமர்சித்த நிலையில்  எதிர்வரும் நாடாளுமன்ற மழை க் கால கூட்டத் தொடரின்போது இந்த மசோதாவை தா க் கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா க த கவல் வெளியா கி உள்ளது.

இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து விவாதிப்பதற் கா க நாடாளுமன்ற நிலை க் குழுவின் சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற் கு அழைப்பு விடு க் கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்ற நிலை க் குழுத் தலைவர் சுஷில் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பா.ஜ. க., காங் கிரஸ், திமு க, ஆம் ஆத்மி, தேசியவாத காங் கிரஸ், திரிணாமுல் காங் கிரஸ் உள்ளிட்ட கட்சி கள் கலந்து கொண்டன. 

அப்போது, பொது சிவில் சட்டத்திற் கு காங் கிரஸ், திமு க, உள்ளிட்ட கட்சி கள் எதிர்ப்பு தெரிவித்தன. விரைவில் ம க் களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பது ஏன் என எதிர் கட்சி கள் கேள்வி எழுப்பி உள்ளன. மேலும் பொது  சிவில் சட்டத்ததை கைவிட வேண்டும் என திமு க சார்பில்  சட்ட ஆணையத்திடம் கடிதம் அளி க் கப்பட்டுள்ளது.

இதையும் படி க் க:"யுத்தத்தை வழிநடத்திய விடயத்தில் தம க் கு எந்தவொரு தொடர்பும் இரு க் கவில்லை" மைத்ரிபால சிறிசேன மறுப்பு!