"மணிப்பூர் குறித்து பிற்பகல் 2 மணிக்கு விவாதிக்க தயார்" மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு!

"மணிப்பூர் குறித்து பிற்பகல் 2 மணிக்கு விவாதிக்க தயார்" மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்கக் கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக அமைச்சர்கள் கூட்டமும், எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்கட்சிகள் கூட்டமும் நடைபெற்றது.

இதையும் படிக்க : ”நோ பேக் டே” புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!

இதையடுத்து  நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 8ம் நாள் அமர்வு தொடங்கியது. அப்போது வழக்கம்போல் மக்களவையில் சபாநாயகரை பேச விடாமல் பதாகைகளுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் முழக்கத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடும் அமளிக்கு மத்தியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடத்த தயார் என உறுதியளித்தார். மீண்டும் அமளி நீடித்தால் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 12 மணிக்கு மாநிலங்களவை தொடங்கிய நிலையில், மீண்டும் எதிர்கட்சியினர் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.