அவையை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒப்புதல்..

நாடாளுமன்ற நடவடிக்கைகளை சுமூகமாக நடத்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. இதில் தற்போது வரை 11 நாள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடந்தேறவில்லை. எதிர்கட்சிகளின் அமளியால் கிட்டதட்ட 83 சதவிகித வேலை நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் மாநிலங்களவையில் 7 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒத்துழைப்பு அளிப்பதாக எதிர்கட்சிகள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக 17 மணி நேர விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.