குழந்தை பருவத்தை நினைவூட்டும் உணவகம்... சாப்பிட வருபவர்களுக்கு ரெயில் பொம்மை மூலம் உணவு சப்ளை !

குழந்தை பருவத்தை நினைவூட்டும் உணவகம்... சாப்பிட வருபவர்களுக்கு ரெயில் பொம்மை மூலம் உணவு சப்ளை !

குஜராத் மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் குழந்தை பருவத்தை நினைவூட்டும் விதமாக ரெயில் போன்ற பொம்மைகள் மூலம் உணவு சப்ளை செய்கின்றனர்.

சூரத் நகரில் உள்ள உணவகம் ஒன்றில்தான் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்களுக்கு ரெயில் பொம்மை மூலம் உணவு எடுத்து செல்லப் படுகிறது.

சர்வர்களின் பணி சுமையை குறைக்கும் இந்த  நடைமுறைக்கு ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.