மீண்டும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும்... கருத்துக் கணிப்பில் தகவல்...

உத்திர பிரதேசத்தில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

மீண்டும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும்... கருத்துக் கணிப்பில் தகவல்...

உத்திரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தனியார் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில், உத்திர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 239 முதல் 245 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 119 முதல் 125 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் 30 இடங்கள் வரை கைப்பற்ற கூடும் எனவும் காங்கிரஸ் 5 முதல் 8 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் ஆளும் பாஜக மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.