இந்தியாவில் வேகமெடுக்கும் ஒமிக்ரான் தொற்று..!

தொற்று பாதிப்பு எண்ணிக்கை 145-ஆக அதிகரிப்பு..!

இந்தியாவில் வேகமெடுக்கும் ஒமிக்ரான் தொற்று..!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. அதிக வீரியமுள்ள வேகமாக பரவக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் முதலாக கண்டறியப்பட்டது. ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவில் இம்மாதம் 2-ம் தேதி கர்நாடகாவில்  முதல் முறையாக ஒமிக்ரான் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டது. 

அதனை தொடர்ந்து,  குஜராத் மாநிலத்துக்கு வந்த இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வந்த 45 வயதுடைய என். ஆர்.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கும், 15 வயது சிறுவனுக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்களிடையே அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ள நாடுகளில் இது மிக வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.