'ஒமிக்ரான்' 1,900 துணை தொற்று உறுதி - மத்திய அரசு

'ஒமிக்ரான்' 1,900 துணை தொற்று உறுதி - மத்திய அரசு

நாடு முழுவதும் கடந்த 4 மாதத்தில் மட்டும் ஆயிரத்து 900 ஒமிக்ரான் தொற்றின் துணை வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் இதனை தெரிவித்தார்.  சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கி உள்ளதாகவும், இந்த நாடுகளில் வருகை தரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளில் இருந்து வருகை தரும் மொத்த பயணிகளில் 2 சதவீதம் பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் அப்போது கூறினார்.