இணையத்தில் வைரலாகும் பழைய விளம்பரம்...

மும்பையில் உள்ள பிரபல தாஜ் நட்சத்திர ஓட்டலின் பழைய விளம்பரம் ஒன்றை மகிந்திரா அண்டு மகிந்திரா’ குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் பழைய விளம்பரம்...

ஆனந்த் மகிந்திரா பல வியப்பூட்டும் அதிசய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இவரது பதிவுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள பிரபல தாஜ் நட்சத்திர ஓட்டலின் பழைய விளம்பரம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் மேல் வர்கத்தினர் மட்டுமே தங்க கூடிய இந்த ஓட்டலில் ஒருநாள் இரவு தங்க 6 ரூபாய் கட்டணம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது மும்பை தாஜ் ஓட்டலில் ஒருநாள் இரவு தங்க வேண்டும் என்றால் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் ஆகும். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.