பெண்கள் மட்டுமே பணிபுரியம் ஓலா தொழிற்சாலை... 10,000 பேருக்கு வேலை வழங்க திட்டம்...

பெண்கள் மட்டுமே பணிபுரியும் ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பை, ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

பெண்கள் மட்டுமே பணிபுரியம் ஓலா தொழிற்சாலை... 10,000 பேருக்கு வேலை வழங்க திட்டம்...

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-S1 அறிமுகம் மற்றும் அதன் விலையை, கடந்த மாதம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், ஓலாவின் வருங்கால எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும் என்றும், அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் எனவும் பாவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது முழுவதும் பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும் என கூறியுள்ளார்.