அனைத்து கட்சிகளின் அலுவலகங்களுக்கும் சீல் வைப்பு...காரணம் என்ன?!!!

குடிமையியல் நிர்வாகத்தின் தலைமையகத்தில் உள்ள சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சிகளின் அலுவலகங்களுக்கும் சீல் வைப்பு...காரணம் என்ன?!!!

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாகம், சிவசேனா பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்குள்ள பிஎம்சி தலைமையகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கும், சீல் வைத்துள்ளது.   சிவில் தலைமையகத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, மும்பை காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் பிஎம்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  

இதன் கீழ் தரை தளத்தில் இருந்த அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.  உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கோஷ்டியினர் புதன்கிழமை மாலை தெற்கு மும்பையில் உள்ள சிவில் தலைமையகத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர்.  அப்போது ஏற்பட்ட பிரச்சினை போலீசார் தலையிடும் வரை ஒரு மணி நேரம் பதற்றமாக இருந்தது.  

பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் சிவசேனாவின் இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சினை எழுந்தது.  முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களுக்கும், உத்தவ் தாக்கரே தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  காவல்துறையினரின் தலையீட்டால் சமாதானம் செய்யப்பட்டாலும், வளாகத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது என்பதே அனைத்து கட்சி அலுவலகங்களும் மூடப்படுவதற்கான முக்கிய காரணமாகும்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தன்னிடம் பிழையை வைத்துக்கொண்டு ராகுல் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியதேன்?!!