டெல்லியில் மழை பெய்தும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் இல்லை  

டெல்லியில் பரவலாக மழை பெய்தும், காற்றின் தரம் மிக மோசமாகவே இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் மழை பெய்தும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் இல்லை   

டெல்லியில் பரவலாக மழை பெய்தும், காற்றின் தரம் மிக மோசமாகவே இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் வழக்கமாக குளிர்காலம் தொடங்கியதும் காற்றின் தரம் மோசமடைவதுண்டு. இதன் காரணமாகவே, வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தற்போது, தீபாவளிக்கு முன்னதாகவே டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 298க்கு பதிவாகி, மிக மோசம் என்ற நிலையை எட்டியுள்ளது. அங்கு பரவலாக மழை பெய்தும், காற்றின் தரத்தில் முன்னேற்றம் காணப்படாதது, அதிகாரிகளை கவலை அடைய செய்துள்ளது. மக்களும் சுத்தமாக காற்றினை சுவாசிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.