ஈரான், ஆப்கான், பாக். சரக்குகளை தனது துறைமுகங்களில் கையாளப் போவதில்லை - அதானி குழுமம்  

ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாள்வதில்லை என அதானி குழுமம் முடிவெடித்துள்ளது.

இந்தப் புதிய கட்டுப்பாடு நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 13ம் தேதி அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குஜராத்தின் முந்தரா துறைமுகத்தில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பிடிபட்டது.

இந்நிலையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களில் 3 நாடுகளின் சரக்குகளை கையாள்வதில்லை என்ற முடிவை அதானி குழுமம் எடுத்துள்ளது. மேலும் தனது துறைமுகத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன முனையங்களும் இந்தக் கட்டுபாட்டை பின்பற்ற வேண்டுமென அக்குழுமம் அறிவித்துள்ளது.