உ.பி வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டம்…  

உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூரில் விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் இன்று   மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

உ.பி வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் இன்று போராட்டம்…   

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் பகுதியில், விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தலைவர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கலவரப் பகுதிக்கு செல்ல இருந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தடுத்த நிறுத்தப்பட்டு வீட்டு காவலில்  வைக்கப்பட்டுள்ளார்.  பிரியங்கா அடைக்கப்பட்ட அறை அசுத்தமாக இருந்ததால் அந்த   அறையை துடைப்பத்தை கொண்டு  பிரியங்கா சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

அதேபோல் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் கைது செய்யப்பட்டு  காவலில் வைக்கப் பட்டுள்ளனர். அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து அரசியல் தலைவர்கள் உத்திரபிரதேச  மாநிலத்திற்குள் நுழைவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். லக்கிம்பூர் சம்பவம்  நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விவசாயிகள் மீது காரை ஏற்றியது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்ட  14 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

மேலும் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 45 லட்சம் ரூபாயும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என உத்திர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. அத்துடன்  கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் உபி அரசு அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூரில் விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் இன்று   மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதனிடையே விவசாயிகளின் மீதான கொடூரமான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.