”எனது மனைவியிடம் பெண்மை இல்லை; அவர் பெண்ணே இல்லை” விவாகரத்து கேட்ட கணவன்!

எனது மனைவி ஒரு பெண் அல்ல என்று கூறி, தனக்கு விவாகரத்து வேண்டும் எனக்கோரி வாலிபர் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”எனது மனைவியிடம் பெண்மை இல்லை; அவர் பெண்ணே இல்லை”  விவாகரத்து கேட்ட கணவன்!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருர் கடந்த  2016-ம் ஆண்டு  திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணத்துக்கு பிறகு தனது மனைவிக்கு பெண்மை இல்லை என்றும், அவர் ஒரு பெண் அல்ல என்றும் அவருக்கு தெரிய வந்தது.

இதனால் அவர் தன் மனைவியை மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதித்த போது தான் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உங்கள் மகளை அழைத்து செல்லுமாறு அவருடைய  மாமனாரிடம் அவர் கூறியபோது, மீண்டும் தனது மகளை சேர்த்துக்கொள்ளுமாறு மாமனார் வீட்டிற்குள் நுழைந்து மருமகனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து மாமனாரின் மிரட்டலால் பயந்துபோன மருமகன் போலீசாரிடம் புகார் அளித்துவிட்டு,  அதன் பின் மத்திய பிரதேசத்தில் உள்ள கீழ் கோர்ட்டில் மனு தாக்கலும் செய்தார். ஆனால் மனுதாரரிடம் இருந்து முறையான மருத்துவ சான்றிதழ்கள் இல்லாததால், வாய்மொழியாக கூறுவதை மட்டும் வைத்து விவாகரத்து வழங்க முடியாது என கூறி இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இருப்பினும், மத்திய பிரதேச ஐகோர்ட்டில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுவை அப்பீல் செய்தார். அந்த மனுவில் தனது மனைவியிடம் பெண்மை இல்லை என்றும், பெண்ணுக்குரிய குணாதிசயங்கள் அவரிடம் இல்லை என்றும், அவர் பெண்ணே இல்லை என்றும், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாகவும், இதனால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.மேலும் தன் மனைவியின் மருத்துவ தகவல்களையும் சமர்பித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கி‌ஷன் கவுல், எம்.எம்.சுந்த ரேஷ் இருவரும், இந்த வழக்கு தொடர்பாக அவரது மனைவி முறையான பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


.