இடைவிடாது பெய்த கனமழையால் 8 பேர் உயிரிழப்பு..! சாலையே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு கரைபுரண்ட வௌ்ளம்..!

அசாமில் இடைவிடாது பெய்த கனமழையில்  20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் பலியாகியுள்ளனர். 

இடைவிடாது பெய்த கனமழையால்  8 பேர் உயிரிழப்பு..! சாலையே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு கரைபுரண்ட வௌ்ளம்..!

அசாம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 592-க்கு மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. குறிப்பாக கோல்பாரா, பார்பேட்டா, திப்ரூகர், காம்ரூப், நல்பரி, சிராங், தர்ராங், கோலாகாட், உடால்குரி ஆகிய மாவட்டங்களில் மழையில் வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால்,  20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவிர கனமழையால் திங்கோங் பகுதியில் மரம் வேரோடு சாய்ந்ததில் சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை கனமழைக்கு 8 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதனிடையே சாலைகள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், உள்ளூர் மக்கள் சைக்கிளை சுமந்த வண்ணம் தடுமாறியபடி வீடு நோக்கி சென்றனர். 

இந்தநிலையில் திமா ஹசோவா மாவட்டத்தின் ஹப்லாங் பகுதியில் பெய்த கனமழையால்  சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.