மழைக்கால கூட்டதொடர்-செயல்படாத அவைகள்: வெங்கையா நாயுடு

மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடரின் செயல்பாடு இரண்டாவது வாரத்தில்  26.90 சதவீதத்தில் இருந்து 16.49 சதவீதமாக சரிந்துள்ளது என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

மழைக்கால கூட்டதொடர்-செயல்படாத அவைகள்: வெங்கையா நாயுடு

மழைக்கால கூட்டதொடரின் அமர்வில் முதல் இரண்டு வாரங்களில் சபையின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் 21.58 சதவீதமாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செயல்படாத மாநிலங்களவை:

இதுவரை மாநிலங்களவையில் நடைபெற்ற 10 அமர்வுகளில்,  திட்டமிடப்பட்ட 51 மணி 35 நிமிடங்களில் 11 மணி நேரம் 8 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது, இடையூறுகள் காரணமாக  40 மணி நேரம் 45 நிமிடங்களை இழந்தது என்று மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

ஆயுதங்கள் மசோதா மீதான விவாதத்துடன் மட்டுமே உள்ளது.  எந்த மசோதாவும் நிறைவேற்றப்படவில்லை.  பூஜ்ய நேரம் சமர்ப்பிப்புகள் எதுவும் செய்யப்படவில்லை. முதல் இரண்டு வாரங்களில் எட்டு நாட்களில் சிறப்பு தீர்மானங்கள் எதுவும் இல்லை. ஆறு நாட்களில் கேள்வி நேரம் இல்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை தலைவர்:

சபையில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து பேசிய தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்றத்தை திறம்பட செயல்பட வைப்பது அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பொறுப்பாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உலகம்  இந்தியாவை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. அரசியல் வேறுபாடுகள் அபையின் செயல்பாட்டை பாதிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.

அவையில்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறுக்கீடுகள் நாட்டு மக்களின் நலன்களை மட்டுமே பாதிக்கின்றன என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்கள் தடைசெய்யப்பட்ட பதாகைகளை பயன்படுத்துவது நாடாளுமன்றத்திற்கு  உகந்தது அல்ல என்று குறிப்பிட்ட நாயுடு, அதையே மக்களுக்கு நேரடி ஒளிபரப்பு மூலம் காண்பிப்பதில் பல சவால்கள் உள்ளன என்றும் இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்றும் கூறியுள்ளார். 

விலைவாசி உயர்வு , சரக்கு மற்றும் சேவை வரி , அக்னிபாத் பாதுகாப்பு ஆள்சேர்ப்புத் திட்டம் மற்றும் மத்திய நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை முட்டுக்கட்டை போட முயல்வதுடன், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது கட்டுக்கடங்காத பிரச்சினைகளை சந்தித்துள்ளன என்று மேலும் கூறியுள்ளார்.