கிளாஸ்கோ பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...

கிளாஸ்கோ பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உற்சாக வரவேற்பு அளித்தார். 

கிளாஸ்கோ பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...

இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கிளாஸ்கோ நகருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சென்றுள்ளனர். மாநாட்டில் 120 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். பருவநிலை மாற்றத்தின் விளைவுகள், அதற்கான காரணிகள், பருவநிலை மாற்றச் சிக்கலை எதிர்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை தொடர்பாக விரிவாக விவாதிக்க உள்ளனர்.

பருவநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்கும் நட்பு நாடுகளின் தலைவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், அரசு அமைப்புகளை சேர்ந்தவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநாட்டு மையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரோஸ் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக பிரிட்டன்வாழ் இந்தியர்களையும், இந்தியச் சமூகம் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களையும் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.