தமிழ்நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில்...தொடங்கி வைக்க மோடி சென்னை வருகை..

தமிழ்நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில்...தொடங்கி வைக்க மோடி சென்னை வருகை..

தமிழ்நாட்டின் முதல் வந்தே பரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். 

சென்னை - கோவை இடையே அதிவிரைவு வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கிவைக்க உள்ளார். இதற்காக ஏப்ரல் 8 பிற்பகல் 2 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை 
 விமான நிலையம் வருகிறார். அங்கு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை திறந்து வைத்து பார்வை இடுகிறார். பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறார்.அங்கு  தமிழ்நாட்டில்  முதல் முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் சென்னை-கோவை இடையேயான அதிவிரைவு ரயிலை தொடங்கி வைக்கிறார்.

அங்கிருந்து மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சென்று, அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிகள் நிறைவுற்றதும் அங்கிருந்து மீண்டும் விமான நிலையம் செல்கிறார். அங்கு  பிரதமருக்கு வழி அனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பது போடப்பட்டுள்ளது.