"கோயில்களை ஆக்கிரமிக்கிறது தமிழ்நாடு அரசு" மோடி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டுக் கோயில்கள் தமிழ்நாடு அரசால் ஆக்கிரமிக்கப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திறந்த வாகனத்தில் பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  மத்திய அரசு செய்துள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை பட்டியலிட்டார். மேலும், முதலமைச்சர் சந்திர சேகர ராவ் பல்வேறு  ஊழலில் ஈடுபட்டதாகவும் அவர் சாடினார். உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்காக  முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னை அணுகியதாகவும் ஆனால் அதனை நிராகரித்து விட்டதாகவும் மோடி கூறினார். 

தமிழ்நாட்டுக் கோயில்கள் மாநில அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தமிழ்நாடு அரசுடன் பேசி ஆலயங்களை விடுவிக்குமா? என கேள்வியெழுப்பினார். மேலும், ஆலயங்களின் சொத்துக்கள், வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும்  பிரதமர் சாடினார்.  ஆலயங்களை மாநில அரசே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க:“மத்திய பாஜக அரசை கண்டித்து அக்.8-ல் நாதக. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!