மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாதுடன் சந்திப்பு - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்!!

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாதுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்ததாக,  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாதுடன் சந்திப்பு - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்!!

இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்தும் விதமாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியாவில் 17ம் தேதி முதல் நாளை வரை 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, உத்தரபிரதேச மாநில ஆளுநர் அனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குஜராத் முதலமைச்சர் புபேந்தர்பாய் படேல் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, மும்பை, வாரணாசி மற்றும் குஜராத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின்போது மொரீசியஸ்-இந்தியா இடையிலான நல்லுறவை வளர்க்கும் வகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு நல்லுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இருநாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஜெய்சங்கர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 8 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாளைய தினம் இந்தியாவிலிருந்து மொரீஷியஸ் புறப்படுகிறார்.