நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளை திறக்க தடை!!

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளை திறக்க தடை!!

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தெற்கு டெல்லியில் இம்மாதம் 11 ஆம் தேதி வரை இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் இது வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

இதையொட்டி தெற்கு டெல்லியில் 11 ஆம் தேதி வரை இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.