மங்களூர்- பெங்களுரு இடையே சிறப்பு ரயில் - ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 31 வரை

கர்நாடக மாநிலம், மங்களூர்- பெங்களுரு இடையே ஆகஸ்ட் 31 ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

மங்களூர்- பெங்களுரு இடையே சிறப்பு ரயில் - ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 31 வரை

கனமழை : 

கர்நாடகாவில் கடந்து சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மழை, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சாலை துண்டிப்பு : 

இந்த கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு மங்களூரு - பெங்களூரு நகரங்களுக்கிடையேயான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

சிறப்பு ரயில் :

இந்த சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டதால், சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டு, இதுகுறித்து தக்சின கன்னடா எம்.பி நளின் குமார், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை கடந்த ஜுலை 18 ம் தேதி சந்தித்து பேசியுள்ளார். பின்னர் இதற்க்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு மற்றும் மங்களூரு இடையே மைசூரு வழியாக ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த ரயில் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பெங்களூரிலிருந்து இரவு 8. 30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.05 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும். செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும். அதே போன்று, மங்களூரு சென்ட்ரலில் இருந்து மாலை 6.35 மணிக்கு மறுநாள் காலை 6.15 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரு நிலையத்தை சென்றடையும்.திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும்.