சபரிமலைக்கு சென்ற பெண்களில் ஒருவரான பிந்து அம்மினியை நடுரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்த நபர்: வேட்டியை உருவி பதிலடி கொடுத்த அம்மினி!!!

சபரிமலை கோவிலுக்கு சென்ற இரண்டு பெண்களில் ஒருவரான பிந்து அம்மினியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கும்மிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சபரிமலைக்கு சென்ற பெண்களில் ஒருவரான பிந்து அம்மினியை நடுரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்த நபர்: வேட்டியை உருவி பதிலடி கொடுத்த அம்மினி!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய  நிலையில், கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் பிந்து அம்மனி  மற்றும் குடிமைப் பணியில் உள்ள 39 வயதாகும் கனகதுர்கா உள்ளிட்ட இருவரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி அதிகாலையில் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர் . இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் பல்வேறு தரப்பினார் எதிர்ப்பு தெரிவித்து கொதித்து எழுந்தனர்.

இதனால் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரிடமிருந்து இந்த இரு பெண்களுக்கும் மிரட்டல்கள் வரத் தொடங்கியதையடுத்து  அந்த பெண்கள் இருவருமே தங்கள் வீடுகளுக்கும், பணியிடங்களுக்கும் செல்ல முடியமால் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சமூகாஆர்வாளர் என்ற பெயரில் சுற்றிதிரிந்து வந்த பிந்து அம்மினியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர்  பொல பொலனு பொளந்து கட்டியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், பிறரின் நம்பிக்கையை கெடுக்கும் உனக்கு இது தேவைதான் என இந்து அமைப்பினரும் மற்றும் நெட்டிசன்கள் கலாய்ந்து வந்தாலும் ஒரு பெண் இப்படி தாக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிந்து அம்மினியை தாக்கிய நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 323 தன்னிச்சையாக காயப்படுத்தியதற்காக தண்டனை மற்றும் 509 பெண்ணை அவமதித்ததற்காக தண்டனை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக வெள்ளையீ காவல்துறையினர் குற்றாவாளி குறித்து விசாரித்து விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.