இதுவரை 6 முறை விபத்துள்ளான எம்.ஐ.17 வி 5...

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 14 பேருடன் சென்று விபத்துள்ளான இந்திய விமான படைக்கு சொந்தமான எம்.ஐ.17 வி 5 என்ற ஹெலிகாப்டர் இதுவரை 6 முறை விபத்துள்ளாகியுள்ளது. 

இதுவரை 6 முறை விபத்துள்ளான எம்.ஐ.17 வி 5...

2010 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் துவாங் பகுதியில் எம். ஐ.17 வி 5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இரண்டு எம். ஐ.17 வி 5 ஹெலிகாப்டர் நடுவானில் மோதிக்கொண்டதில் 9 வீரர்கள் மரணமடைந்தனர். 2013 ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த  எம். ஐ.17 வி 5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.

2017 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் துவாங் பகுதியில் எம். ஐ.17 வி 5 ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாவட்டம் சமோலியில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எம். ஐ.17  ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. 2019 ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீரில் புத்காம் பகுதியில் எம். ஐ.17 வி 5 ஹெலிகாப்டர் விபத்திய சிக்கியதில் அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர்.