லவ்லினாவின் அரையிறுதி போட்டியை காண சட்டசபையை ஒத்தி வைத்த அசாம் அரசு...

அசாம் சட்டசபை நிகழ்வை 20 நிமிடத்திற்கு ஒத்திவைத்து, எம்எல்ஏக்கள் அனைவரும் குத்துச்சண்டை வீராங்கனை லவ்னினாவின் அரைஇறுதி ஆட்டத்தை காணவுள்ளனர். 

லவ்லினாவின் அரையிறுதி போட்டியை காண சட்டசபையை ஒத்தி வைத்த அசாம்  அரசு...

ஒலிம்பிக் குத்துச்சண்டை மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற லவ்லினா போர்கோஹைன், அரையிறுதிக்கு தகுதிப்பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இதனிடையே அரையிறுதிப்போட்டியானது இன்று நடைபெறவுள்ள நிலையில், அவர் முன்னாள் உலக சாம்பியனான துருக்கியின் பூசெனஸ் சர்மினெலியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றிப்பெற்றால் லவ்லினா தங்கத்தை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.  

இந்நிலையில் அசாமை சேர்ந்த லவ்லினாவின் அரையிறுதி ஆட்டத்தை காண, அம்மாநில அவையில் சட்டசபை நிகழ்வுக்கு இடையே 20 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. அந்தநேரத்தில் அவையில் அமர்ந்தபடி எம்எல்ஏக்கள் அனைவரும் லவ்லினாவின் போட்டியை நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.