பண்டோரா பேப்பர்ஸ் பட்டியல்: அனில் அம்பானி, சச்சின் பெயர்கள் இடம் பிடித்ததால் பரபரப்பு  

பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகியுள்ளது.சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியில் அனில் அம்பானி, நிரவ் மோடியின் சகோதரி மற்றும் இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கr  உட்பட 300க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த 11.9 மில்லியன் ஆவணங்களை 600-க்கும்  மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.