93 வது பிறந்த நாள் கொண்டாட்டம்: லதா மங்கேஷ்கரின் வாழ்நாளை குறிக்கும் 92 வெண்தாமரை...!

93 வது பிறந்த நாள் கொண்டாட்டம்: லதா மங்கேஷ்கரின் வாழ்நாளை குறிக்கும் 92 வெண்தாமரை...!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவில், பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் நினைவாக அங்குள்ள மார்கெட் பகுதிக்கு ‘லதா சவுக்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்த நாள்:

இந்தி திரையுலகின் நைட்டிங்கேலாக திகழ்ந்து, பிரபல பின்னணி பாடகியாக  வலம் வந்த லதா மங்கேஷ்கர் வயது முதிர்வு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற அவருக்கு இன்று 93வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

காணொலியில் கலந்து கொண்ட மோடி:

லதா மங்கேஷ்கரின் கலைச்சேவையை பாராட்டி, அயோத்தியில் பாஜக சார்பில் மார்க்கெட் தெரு ஒன்றுக்கு ‘லதா சவுக்’ என பெயரிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பெயர் மாற்றப்பட்ட ‘லதா சவுக்-கை’  மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அவர் நினைவாக 40 அடியில் 14  கிலோ எடையில் அமைக்கப்பட்டுள்ள வீணையையும் திறந்து வைத்தார். இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.

இதையும் படிக்க: அடுத்தடுத்து சரிவை சந்திக்கும் ஓபிஎஸ் வெற்றி முகத்தை அடைவாரா? உச்சநீதிமன்றம் சொல்ல போகும் திர்ர்ப்பு என்ன?

இசை நல்லிணக்கத்தின் அடையாளம்:

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இசை நல்லிணக்கத்தின் அடையாளமாக இருக்கும் சரஸ்வதியின் வீணையானது லதா மங்கேஷ்கர் நினைவாக நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவரது வாழ்நாளை குறிக்கும் வகையில் 92 வெண்தாமரை வடிவிலான மார்ப்பிள்கள் மார்க்கெட் வளாகத்தில் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.