"இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய சிறகுகளை அளிக்கும் முடிவு " - பிரதமர் மோடி ட்வீட்!

"இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய சிறகுகளை அளிக்கும் முடிவு " - பிரதமர் மோடி ட்வீட்!

கனவுகளை நிறைவேற்ற மொழி ஒரு தடையில்லை என்பதையே சி.ஏ.பி.எஃப் அறிவிப்பு காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  


மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான கணினி வழி  தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஆனால், இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்த தேர்வை தமிழிலும், இதர தாய் மொழிகளிலும் நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

இதையும் படிக்க : மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான தேர்வுகளை 13 மொழிகளில் நடத்த முடிவு...!

இதனைத்தொடர்ந்து, மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான கணினி வழி  தேர்வு இந்தி, ஆங்கிலம் உள்பட 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும் எனவும், இது உள்ளூர் இளைஞர்களின் பங்கேற்புக்கு உத்வேகத்தை அளிக்கும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சி.ஏ.பி.எஃப் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய சிறகுகளை அளிக்கும் முடிவு என்றும், கனவுகளை நிறைவேற்ற மொழி ஒரு தடையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.