மணிப்பூர் மாநில ஆளுநராக பதவியேற்றார் இல.கணேசன்... உயர்நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...

மணிப்பூரின் 17-வது ஆளுநராக பாஜக மூத்த தலைவரான இல. கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக பதவியேற்றார் இல.கணேசன்... உயர்நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து, பின்னர் தமிழக பாஜக தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர் இல. கணேசன். மூத்த அரசியல் வாதியான இவரை மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று மணிப்பூர் மாநில ஆளூநராக கடந்த 22-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.

ஏற்கனவே அங்கு தற்காலிக ஆளுநராக சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத் இருந்து வந்த நிலையில், இல. கணேசன் நிரந்தர ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று இம்பால் சென்ற அவருக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் உற்சாக வரவேற்பு அளித்தார்.

இந்த நிலையில் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி. சஞ்சய் குமார், இல. கணேசனை  ஆளுநராக இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.