கேரளா நடிகர் அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்பு..! தற்கொலை என சந்தேகிக்கும் போலீசார்..!

கேரள நடிகர் சரத் சந்திரன் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கேரள திரைத்துறையை சேர்ந்த நடிகர் சரத் சந்திரன், தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 37. இவரது நடிப்பில் வெளியான அங்கமாலி டைரீஸ், கூடே, ஒரு மெக்சிகன் அபரதா போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர்.  

அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்த நடிகர் அண்டனி வர்கீஸ், இவரது புகைப்படத்தை பகிர்ந்து, இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இவரது இறப்புக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தற்கொலை செய்துகொண்டிருக்காலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொச்சியைச் சேர்ந்த சரத் சந்திரன், முன்னதாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்ததோடு, டப்பிங் கலைஞராகவும் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.