30 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட முதல் மல்டிப்ளெக்ஸ்!!! கஷ்மீரில் மக்கள் மகிழ்ச்சி!

3 தசாபதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் புதிய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான கஷ்மீரில், முதல் மள்டிப்ளெக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டது. இதனால், மக்கள் குஷியில் உள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட முதல் மல்டிப்ளெக்ஸ்!!! கஷ்மீரில் மக்கள் மகிழ்ச்சி!

இந்தியாவுடன் இணைந்த ஜம்மு மற்றும் கஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், தற்போது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் மற்ற யூனியன் பிரதேசங்கள் போலவே, கட்டமைப்புகள் கொண்டு உருவாகி வருகிரது. அவ்வரிசையில், தற்போது, கஷ்மீரில், முதல் மள்டிப்ளெக்ஸ் தியேட்டர், சுமார் 30 ஆண்டுகள் கடந்து திறக்கப்படவுள்ளது. அதனை, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தான் திறந்து வைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநகரில் திறக்கப்படவுள்ள இந்த ஐனோக்ஸ் (INOX)- ஆல் வடிவமைக்கப்பட்ட மள்டிப்ளெக்ஸ், திரைப்படங்களின் அனுபவத்தை கஷ்மீரிகளுக்குக் கொடுக்க இருக்கிறது. அதுவும், முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட இருக்கும் இந்த தியேட்டரால், மக்கள் மிகவும் குஷியாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.

சுமார் 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் பார்க்கும் படியாக, மூன்று பெரும் அரங்கங்கள் இந்த மள்டிப்ளெக்சில் கட்டப்பட்டுள்ளன. டோல்பி அட்மோஸ்-ஆல் வழங்கப்பட்ட இந்த அரங்கங்கள், பார்வையாளர்கள், மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

கஷ்மீரி ஹாண்டிகிராஃப்ட் அதாவது, கைவினைப் பொருட்களான ‘கட்டம்பண்ட்’ (khatamband) மற்றும் ‘பேப்பியர் மச்சே’ (papier mache) ஆகியவை இந்த திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது, தனித்துவமாகவும், இத்தியேட்டரின் பிரத்யேக சிற்ப்பாம்சமாகவும் பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, மற்ற மள்டிப்ளெக்ஸ் போலவே, உணவரங்கமும் அமைக்கப்படவுள்ளன.

1990களில், ராணுவ படைகளின் ஆதிக்கத்தால், கஷ்மீரில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டன. மேலும், அப்போது வரை இந்திய சினிமாவின் ஒரே சுவித்சர்லாந்து அதாவது, ஷூட்டிங் லொகேஷனாக இருந்த ஜம்மு மற்றும் கஷ்மீர், போர் காரணமாக முழுவதுமாக மூடப்பட்டது. மேலும், தியேட்டர்களில் வந்து தான் தங்களது மன நிம்மதியைத் தேடினர் மக்கள். ஆனால், அதுவும் மூடப்பட்டு, வெறும் போர், சண்டை, குண்டு வெடிப்பு, சோகம் ஆகியவையே சூழ்ந்து மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதனை சரி செய்யவும், ஒருவருக்கொருவர் துணையாக நின்று மன நிம்மதி அடையவும் உதவியாக இருக்கும் வகையில், தியேட்டர் ஒன்று திறக்கவும், அது ஒரு ,அள்டிப்ளெக்சாக இருக்க வேண்டும் எனவும் நினைத்த விஜய் தார், இந்த திட்டத்தைத் துவங்கினார். இதனால், மக்கள் படு குஷியில் ஆந்துள்ளனர்.