முழு கொள்ளளவை எட்டிய கபினி அணை
தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரியில் விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரியில் விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபிணி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 124 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் நீர் இருப்பு 101.68 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து காரணமாக கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அணை நிரம்பி வழிவதால், விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம், காவிரியில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று வரை அந்த இரு அணைகளில் இருந்தும் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 12 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரத்து 514 கன அடியிலிருந்து 11 ஆயிரத்து 794 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 73.47 அடியாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.