பாஜக மீதான அதிருப்தியில்...காங்கிரசில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்...!

பாஜக மீதான அதிருப்தியில்...காங்கிரசில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்...!

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 212 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் 11 எம்எல்ஏக்களுக்கு டிக்கெட் வழங்கப்படாத நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த எம்எல்ஏவும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர், நேற்று பாஜகவில் இருந்து விலகினார். 

இதையும் படிக்க : அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை... விரைவில் தீர்வு!!

இந்த நிலையில் பெங்களூருவில் மல்லிகார்ஜூன கார்கே, டி.கே. சிவகுமார், சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில், அக்கட்சியில் ஜெகதீஷ் ஷெட்டார் இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிக்கெட் கிடைக்காதது தொடர்பாக எந்த மூத்த தலைவரும் தன்னை சமாதானம் செய்யவோ பேசவோ கூட இல்லை என தெரிவித்தார். மாநிலத்தில் பாஜகவை வளர்த்த போதும், சொந்தக் கட்சியினரால் அவமானப்படுத்தப்பட்டேன் என குறிப்பிட்ட அவர், முழுமனதுடன் காங்கிரசில் இணைவதாகவும் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர், முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் பல எம்.பி.க்கள் நிபந்தனையின்றி காங்கிரசில் சேர விரும்புவதாகவும், அனைவரையும் முழுமனதுடன் வரவேற்பதாகவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.