தன்னம்பிக்கையுடன் கூடிய நவீன இந்தியாவை உருவாக்குவது அவசியம் ... பிரதமர் மோடி..!

‘வலிமையான இந்தியா’ என உலக நாடுகளின் கண்ணோட்டம் மாறியிருக்கும் சூழலில், தன்னம்பிக்கையுடன் கூடிய நவீன இந்தியாவை உருவாக்குவது அவசியம்  என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தன்னம்பிக்கையுடன் கூடிய நவீன இந்தியாவை உருவாக்குவது அவசியம் ... பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி இனறு பட்ஜெட் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றின் போது, இந்தியாவின்  பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்துள்ளதாக குறிப்பிட்டதுடன்,  கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் கூறினார். 

தற்போது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு  மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் தான் காரணம் என கூறிய மோடி,  தன்னம்பிக்கையுடன் கூடிய  நவீன இந்தியாவை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார். 

மத்திய பட்ஜெட்டில், ஊரக வளர்ச்சியை மேம்படுத்த  முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  வேளாண்துறையை நவீனப்படுத்திடும் வகையில் இயற்கை  விவசாயத்திற்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.