உண்மையே தனது ஆயுதம்...உண்மையே தனது பலம்...ராகுல்காந்தி ட்வீட்!

ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தில், உண்மையே தனது ஆயுதம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மோடி சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், ஜாமீனையும் வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிக்க : ஈபிஎஸ் வீட்டுக்கு தடபுடலாக வந்த சீர்வரிசை...மாஸ் காட்டிய விஜயபாஸ்கர்...!
அதன்படி, இந்த வழக்குக்கு எதிராக ராகுல்காந்தி இன்று மேல்முறையீடு செய்தார். அப்போது, வழக்கை மே 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சூரத் நீதிமன்றம் அறிவித்தது. தொடர்ந்து ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நடப்பது ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம் எனவும், இதில் உண்மையே தனது ஆயுதம் மற்றும் பலம் எனவும் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ये ‘मित्रकाल’ के विरुद्ध, लोकतंत्र को बचाने की लड़ाई है।
— Rahul Gandhi (@RahulGandhi) April 3, 2023
इस संघर्ष में, सत्य मेरा अस्त्र है, और सत्य ही मेरा आसरा! pic.twitter.com/SYxC8yfc1M