பயங்கரவாதியின் கல்லறையை அழகுபடுத்துவதுதான் தேசபக்தியா???

பயங்கரவாதியின் கல்லறையை அழகுபடுத்துவதுதான் தேசபக்தியா???

மார்ச் 12, 1993 அன்று, மும்பை தொடர் குண்டுவெடிப்பு நாட்டையே உலுக்கியது. அதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் தோராயமாக ₹ 27 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு மத்திய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட  குற்றவாளி யாகூப் மேமன்.

1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் மும்பையின் படா கப்ரஸ்தானில் உள்ள கல்லறை  அழகுபடுத்தப்பட்டது தொடர்பான விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை உறுதியளித்துள்ளார்.

"விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஷிண்டே கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மும்பை காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படா கப்ரஸ்தானில் உள்ள யாகூப் மேமனின் கல்லறையில் அழகுப்படுத்தும் பணிகள் தொடங்கியதையடுத்து மகாராஷ்டிராவின் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ ராம் கதம், ஒரு பயங்கரவாதியின் கல்லறையை "நினைவிடமாக" மாற்றுவது தான் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் தேசபக்தியா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிக்க: "ஒரு நரியைப் போல் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, சிங்கம் போல் ஒரு நாள் வாழ்வது சிறப்பானது”